ஐம்பெரும் காப்பியங்கள் (Aimperum Kappiyangal)

சிலப்பதிகாரம் (Silappadhikaram)
மணிமேகலை (Manimekalai)
சீவக சிந்தாமணி (Seevaga Chintamani)
வளையாபதி (Valaiyapathi)
குண்டலகேசி (Kundalakesi)

ஐஞ்சிறு காப்பியங்கள் (Iynchiru Kaappiyangal)

உதயண குமார காவியம் (Uthayana Kumara Kaaviyam)
நாக குமார காவியம் (Naga Kumara Kaaviyam)
யசோதர காவியம் (Yasodara Kaaviyam)
சூளாமணி (Choolaamani)
நீலகேசி (Neelakesi)

எட்டுத்தொகை (Ettuthogai)

நற்றிணை (Narrinai)
குறுந்தொகை (Kurunthokai)
ஐங்குறுநூறு (Ainkurunooru)
கலித்தொகை (Kalithokai)
அகநானூறு (Agananooru)
பதிற்றுப்பத்து (Pathirruppattu)
புறநானூறு (Purananooru)
பரிபாடல் (Paripadal)

இந்திராணி

ADVERTISEMENTS









பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் எனப்படுவர்.

இதில் ஒவ்வொரு கன்னியரும் ஒவ்வொரு சிவாலயங்களுக்கு சென்று சிவனின் அருளாசி பெற்றுள்ளனர். சப்தகன்னியரில் இந்திராணி வழிபட்ட தலம் நாகப்பட்டினம் மாவட்டம், தருமபுரம் அருள்மிகு அபயாம்பிகை சமேத தருமபுரீசுவரர் திருக்கோயில் ஆகும். குருஞானசம்பந்தரால் நிறுவப்பெற்ற புகழ்பெற்ற தருமை ஆதீனம் இங்குள்ளது. தருமராஜா பூஜித்தது. எமன் சிவபிரானை வழிபடும் திருவுருவங்கள் வழிபாட்டில் உள்ளன. பதினெண்கரங்களோடு கூடிய துர்கை ஆலயம் இங்கு உள்ளது.

சந்திரனின் சாப நீக்கம் பெற்ற தலமும் கூட, மனோகாரகன் எனும் ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் சந்திரன், மனிதனின் மனத்தைக் குறிப்பிடுபவன். கலைகள், கற்பனைத் திறன் இவையெல்லாம் சந்திரனைப் பொறுத்தே அமைகின்றன. அந்த சந்திரனுக்கு அருள்பாலித்த பெருமான், அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர். பசுபதி கோயில் எனும் ஊரில் சுயம்பு லிங்கமாகத் தோன்றி கோயில் கொண்டுள்ளார். தஞ்சை-கும்பகோணம் சாலையில் பசுபதி கோயில் ஊருக்கு முன்பாக, சாலையிலிருந்து சற்று விலகி கிழக்குநோக்கி கம்பீரமாக அமைந்துள்ளது ஆலயம். அம்பாள் ஆதி மூல அம்பிகையாக, மகாராணியாக, ராஜராஜேஸ்வரியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள். சப்த மங்கை தலங்களுள் பல்வேறு சிறப்புகளைப் பெற்று தனித்து விளங்குகிறது இந்தத் தாழமங்கை.

சப்த மங்கையர்களின் இந்திராணி எனப்படும் தாழமங்கை, தங்கியிருந்து வழிபட்ட சிவாலயம். அதனாலேயே கோயிலின் பெயர்கூட, தாழமங்கை சந்திரமவுலீஸ்வரர் சிவாலயம் என்றுதான் இன்றுவரை பேச்சு வழக்கில் உலவுகிறது.

இந்திராணி, இந்திரன் அம்சம் உடையவள். இரண்டு கண்கள் உடையவள். அழகிய ஆடை பூண்டவள். வரதம், அபயம் உடையவள். யானைக்கொடி, யானை வாகனம் உடையவள்.

மயிலாடுதுறை செம்பொனார் கோயில் பேருந்துச்சாலையில் உள்ளது.

காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

இந்திராணி - ரூபலக்ஷ்ணம் (திருவுருவ அமைப்பு)

இவள் இந்திரனின் சக்தி மகேந்திரி என்றும் - ஐந்திரி என்றும் அழைக்கப்படுவாள். ஒரு முகமும், நான்கு கரங்களும் உடையவள். கீழ் இரு கரங்களையும், அபயவரதமாகக் கொண்டவள். மேல் வலக்கையில் - சக்தியையும் - இடக்கையில் அம்பையும் ஆயுதமாகக் கொண்டு காட்சி கொடுப்பவள். ஆயிரம் கண்களை அகநோக்கில் உடையவள். இரத்தின கிரீடம் அணிந்திருப்பவள் யானை வாகனத்தின் மேல் அமர்ந்திருப்பாள் பொன்னிறமேனியள். இந்திரன் தேவலோக அரசன் - எனவே இவள் அரசி. அரச சம்பத்தெல்லாம் இந்த சக்தியின் அனுக்கிரகத்தால் ஏற்படுகிறது என்று லகுஸ்துதி சுலோகம் கூறும் இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் - பதவிகளை அடையலாம்!

இந்திராணி பாடல்: கரம் விராய வச்சிரக் கவின்பெற்ற இந்திராணிதரம் விராயபல்லுயிர்க்கு நன்கருள் திருத் தருமபுரம் விராய அற்புதன் அடிப்பூசனை புரிந்தாள்பரம் விராய பல் வரங்களும் பண்புறப் பெற்றாள்.

இந்திராணி ஐந்தரி பூஜா

ஆசன மூர்த்தி மூலம்: ஓம் - ஹ்ரீம் - இந்திராணி - ஆசனாயயாய - நம:ஓம் - ஹ்ரீம் - இம் - இந்திராணி மூர்த்தியை - நம:ஓம் - ஹ்ரீம் - தம் - இம் - இந்திராணியே - நம:

காயத்ரி: ஓம் - கஜத்வஜாயை வித்மஹே;வஜ்ரஹஸ்தாயை தீமஹி;தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

தியான ஸ்லோகம்: ஏக வக்த்ராம் த்விநேத் ராம்;ச சதுர்புஜ ஸமன் விதாம்;ஸ ரத்ன மகுடோபேதாம்,ஹேமவர்ண ஸ்வரூபிணீம்;வராபயகராம், போஜாம்,வஜ்ரம் சக்திம் ச தாரிணீம்;மாஹேந்த்ரீம் மாதரம்,வந்தே கஜவாஹண ஸம்ஸ்த்திதாம்.

மூல மந்திரம்: ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :

அர்ச்சனை: ஓம் இந்த்ராயை நமஓம் தேவேந்திராயை நமஓம் மகேந்த்ரியாயை நமஓம் ஐராவதரூடாயை நமஓம் சகஸ்ரநேத்ராயை நமஓம் சதமன்யவேயை நமஓம் புரந்தராயை நமஓம் த்ரிலோகாதிபதாயை நமஓம் ஸ்ரீமதே நமஓம் சசிநாமாயை நம

ஓம் வாஸ்தோபதாயை நமஓம் திக்பாலநாயகியை நமஓம் கர்மதேனு சமன்விதாயை நமஓம் வாச வாயை நமஓம் சத்ய வாதிநேயை நமஓம் சூப்ரீ தாயை நமஓம் வஜ்ரதேகாயை நமஓம் வஜ்ரஹஸ்தாயை நமஓம் பஷணாயை நமஓம் அநகாயை நம

ஓம் புலோமஜிதேயை நமஓம் பலிதர்ப்பக்நாயை நமஓம் யக்ஷ சேவ்யாயை நமஓம் வேதபர்வநாயை நமஓம் இந்த்ரப்ரியாயை நமஓம் வாலி ஜநகாயை நமஓம் புண்யாத்மநேயை நமஓம் விஷ்ணு பக்தாயை நமஓம் ருத்ர பூஜிதாயை நமஓம் ராஜேந்திராயை நம

ஓம் கல்பத்தருமேசாயை நமஓம் நமுச்சயேயை நமஓம் யஞ்ஞப்ரீதாயை நமஓம் யஞ்ஞசோசநாயை நமஓம் மாந்தாயயை நமஓம் தாந்தாயயை நமஓம் ருது தாம்நேயை நமஓம் சத்யாத்மநேயை நமஓம் புருஷ சூக்தாயை நமஓம் புண்டரீகாஷாயை நம

ஓம் பீதாம் பராயை நமஓம் மகா பராயை நமஓம் ப்ரஹ்மவித்யாயை நமஓம் சர்வாபரணபூசிதாயை நமஓம் சுப ரூபாயை நமஓம் சந்த்ரவர்ணாயை நமஓம் களாதராயை நமஓம் இந்த்ரரூபிண்யை நமஓம் இந்த்ர சக்த்யை நமஓம் சுந்தர்யை நம

ஓம் லோக மாத்ரேயை நமஓம் சுகாசனாயை நமஓம் காஞ்ச நாயை நமஓம் புஷ்பஹராயை நமஓம் பதிவ்ரதாயை நமஓம் ஹேமாவத்யை நமஓம் பஹாவர்ணாயை நமஓம் பங்கள காரிண்யை நமஓம் தயாரூபிண்யை நமஓம் பரா தேவ்யை நம

ஓம் சித்திதாயை நமஓம் திவ்யாயை நமஓம் சத்யப்ரபாயை நமஓம் சத்யோசாதாயை நமஓம் யோகின்யை நமஓம் பாபநாசின்யை நமஓம் இந்த்ர லோகாயை நமஓம் சாம்ராஜ்யாயை நமஓம் வேத சாராயை நமஓம் அம்ரகாணாம்யை நம

ஓம் அணிமாயை நமஓம் சுப ரூபாயை நமஓம் புராதன்யை நமஓம் ஹேமபூசணாயை நமஓம் சர்வ நாயகியை நமஓம் கப காயை நமஓம் உச்சைஸ்வர ரூடாயை நமஓம் சிந்தாமணி சமாயதாயை நமஓம் அஹிப்ரியாயை நமஓம் தர்மஸ்ரீலாயை நம

ஓம் சர்வ நாயகாயை நமஓம் நகாராயை நமஓம் காஸ்யபேயாயை நமஓம் ஹராயை நமஓம் ஜயந்த்ஜநகாயை நமஓம் உபேந்தபூர்வசாயை நமஓம் மகவதேயை நமஓம் பர்ஜன்யாயை நமஓம் சூதா ஹாராயை நமஓம் திவ்ய ரத்ன கிரீடாயை நம

ஓம் ஸ்ரீயவர்த்தநாயை நமஓம் ஹரிஹராயை நமஓம் சண்டவிக்ரமாயை நமஓம் வேதாங்காயை நமஓம் பாகசாசநாயை நமஓம் அதிதிநந்தநாயை நமஓம் ஹவிர்போக்த்ரேயை நமஓம் சகல பக்ஷப்ரபேதாயை நமஓம் நிர்மலா சயாயை நமஓம் ஆகண்டலாயை நம

ஓம் மருத்வதேயை நமஓம் மகா மாயினேயை நமஓம் பூர்ண சந்த்ராயை நமஓம் லோகாத்யக்ஷõயை நமஓம் சூராத்யக்ஷõயை நமஓம் குணத்ரயாயை நமஓம் ப்ராண சக்த்யை நமஓம் ஐந்த்ரியாயை நம

ஸ்ரீஇந்திராணி அஷ்டசத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணா.

பூஜை: பீஜங்களுடன் கூடிய தேவிநாமம் கூறி - சமர்ப்பியாமி சொல்லி - தூப - தீப - நைவேத்திய - தாம்பூலம் - சமர்ப்பிக்க வேண்டும்.

துதி: கிரீடினி மஹா வஜ்ரேஸஹஸ்ர நயனோ ஜ்வலேவ்ருத்ர ப்ராணஹரே சைந்த்ரிமகேந்த்ரி நமோஸ்துதே.









ADVERTISEMENTS
ADVERTISEMENTS